எமது பணி...
சிவபீடம் முதல் கட்ட மாக திருவாரூர் நாகப்பட்டினம் தஞ்சாவூர் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 1000 திற்கும் மேற்பட்ட சிவனருள் செல்வர்களையும் சிவனடியார்களையும் தனது உயரிய நோக்கத்திற்காக தன் பணியில் இணைத்து செயல் படுகிறது.

மனிதன் முழுமை பெற பக்தி வேண்டும். செயல் வேண்டும். ஞானம் வேண்டும் இதை எளிதில் பெற நம் முன்னோர்கள் முனிவர்கள ரிஷிகள் சித்தர்கள் மகான்கள் சிவ லிங்க வழிபாடு செய்தனர் அவர்கள் வணங்கிய சிவ லிங்க பீடம் பின்னாளில் மன்னர்களால் ஆற்றல் வெளிபடுத்தும் கோவில்களாக கட்ட பட்டன அவைகள் இப்போது முள் காடுகள் மண்டி கேட்பாரற்று மேற் கூரை இல்லாமல் வழிபாடு இல்லாமல் தீபங்கள் ஏற்றாமல் உள்ளது மக்கள் சிவ சிந்தனை இல்லாமல் சிவ வழிபாட்டை விட்டு பல வழிபாடு முறைகளை கடை பிடிக்க சென்று விட்டனர் இருப்பினும் ஆங்காங்கே சிவ நிலை கடந்த உள்ளம் படைத்த சில சிவனடியார்கள சிவ லிங்க திருமேனிகளை பாதுகாத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வருகின்றனர்.

சிவ பீடமானது தனி மனித வளர்சிக்கு உறுதுணை அளிக்கவும் மனித தன்மைக்கு புத்துயிர் ஊட்டவும் சமுதாயங்களை மறு   சீரமைக்கவும், சிவாலய வழிபாட்டின் அவசியம், சிவாலய திருபணியின் அவசியம், அகல் தீபம் ஏற்றுவதால் ஏற்படும் மேன்மை,  பன்னிருதிருமுறைகள்( தமிழ் வேதம் ) படிப்பதால் ஏற்படும் நன்மைகள் போன்ற திட்டங்களையும் சித்தர்கள் பயன் படுத்திய   சித்தவைத்தியம், ஹோமியோபதி வைத்தியம் பற்றிய விழிப்புணர்வு திட்டங்களையும் முன்னிறுத்தி நடை முறை படுத்தி வருகிறது

எதிர்கால திட்டங்கள்...

1. வேதாரண்யம் கோடியக்கரை வரும் சிவனடியார்கள் தங்கி உணவருந்தி செல்ல திருத்துறைப்பூண்டியில் 1000 சதுர அடியில் ஒரு தங்கும் இடமும் 1000 சதுர அடியில் ஒரு உணவு கூடமும் கட்டுதல் தினமும் ஒருவேளை இரவு உணவு ( அன்னதானம் ) வழங்குதல்.

2. தமிழக அளவில் இடம் தேர்வு செய்து குழந்தை இல்லாத வயதான முதியவர்களையும் திருமணம் புரியாமல் வாழ்ந்து முடித்த முதியவர்களையும் பாதுகாக்க மருத்துவ வசதியுடன் கூடிய ஆன்மீக சூழலில் ஒரு அமைதியான காப்பகம் 2௦ ஏக்கர் நிலபரப்பில் அமைக்க பட்டு செயல் படுத்த படும்.

      எமது பணிகளில் சில...

  • 1. கூரை இல்லாத சிவலிங்க திருமேனி களுக்கு கூரை அமைத்து கொடுத்து தினமும் அகல் தீபம் ஏற்றி தினசரி பூஜைகள்   சிவனடியார்களை வைத்து நடைபெற வழி வகை செய்தல். 

    2. பன்னிருதிருமுறைகள் தேவாரம் திருவாசகம் சைவ சமய வகுப்புகள் நடை பெற வழி வகை செய்தல். 

    3. சிதலமடைந்த சிவாலயங்களை கிராம மக்கள் ஒத்துழைப்புடன் திருப்பணி செய்தல். 

    4. சிவாலயங்களில் தீபம் ஏற்ற வசதி இல்லா ஆலயங்களுக்கு தீப என்னை வழங்குதல். 

    5. மகா சிவராத்திரி விழா: 
    108 சிவாலயங்களில் கோவிலுக்கு 1008 அகல் தீபம் வீதம் 1 088 64 அகல் தீபம் பெண்களை கொண்டு ஏற்றி இரவு முழுவதும் எரிய விடும்   மகா தீப திருவிழா நடத்துதல். இரவு முழுவதும் திருவாசகம் ஒலிபெருக்கி மூலம் முற்றோதல் செய்தல். 

    6. சிவாலய உழவார பணி: 
    சிவாலயங்களில் ‘மணி வாசகர் உழவார பணி குழு “ மூலம் மாதம் தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் நடை பெறுகிறது.

    7. திருமுறை பாடல் பயிற்சி:  
    பன்னிருதிருமுறைகள்- தேவாரம் திருவாசகம் பயிற்சி பள்ளி சிவாலயம் உள்ள கிராமங்களில் மாணவ மாணவிகளுக்கு நடத்துதல். 

    8. இலவச (tutuion centre ) தனி பயிற்சி பள்ளி:  
    ஏழை மாணவ மாணவிகளுக்கு மாலை நேர இலவச (tutuion centre) தனி பயிற்சி பள்ளி நடத்துதல். 

    9. மருத்துவ உதவி:  
    சிவாலயம் உள்ள கிராமத்தில் சித்தமருத்துவம் ஹோமியோபதி மருத்துவம் மாதம்தோறும் இலவசமாக வழங்க படும்.