தற்போது நடைபெற்றுக்கோண்டிருக்கும் திருப்பணிகள்...
மனிதன் முழுமை பெற பக்தி வேண்டும். செயல் வேண்டும். ஞானம் வேண்டும் இதை எளிதில் பெற நம் முன்னோர்கள் முனிவர்கள்,   ரிஷிகள் சித்தர்கள் மகான்கள் சிவ லிங்க வழிபாடு செய்தனர். அவர்கள் வணங்கிய சிவ-பீடம் பின்னாளில் மன்னர்களால் ஆற்றல்   வெளிபடுத்தும் கோவில்களாக கட்டபட்டன. அவைகள் இப்போது முள் காடுகள் மண்டி கேட்பாரற்று மேற் கூரை இல்லாமல் வழிபாடு   இல்லாமல் தீபங்கள் எரியாமல் உள்ளது. மக்கள் சிவ சிந்தனை இல்லாமல் சிவ வழிபாட்டை விட்டு பல வழிபாடு முறைகளை  
கடை பிடிக்க சென்று விட்டனர். இருப்பினும் ஆங்காங்கே சிவ நிலை கடந்த உள்ளம் படைத்த சில சிவனடியார்கள சிவலிங்க   திருமேனிகளை பாதுகாத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வருகின்றனர்.

சிவபீடத்தின் தற்போதைய திருப்பணிகள்:

எதிர்கால திட்டங்கள்...

1. வேதாரண்யம் கோடியக்கரை வரும் சிவனடியார்கள் தங்கி உணவருந்தி செல்ல திருத்துறைப்பூண்டியில் 1000 சதுர அடியில் ஒரு தங்கும் இடமும் 1000 சதுர அடியில் ஒரு உணவு கூடமும் கட்டுதல் தினமும் ஒருவேளை இரவு உணவு ( அன்னதானம் ) வழங்குதல்.

2. தமிழக அளவில் இடம் தேர்வு செய்து குழந்தை இல்லாத வயதான முதியவர்களையும் திருமணம் புரியாமல் வாழ்ந்து முடித்த முதியவர்களையும் பாதுகாக்க மருத்துவ வசதியுடன் கூடிய ஆன்மீக சூழலில் ஒரு அமைதியான காப்பகம் 2௦ ஏக்கர் நிலபரப்பில் அமைக்க பட்டு செயல் படுத்த படும்.

திருவாசக துளிகள்..
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி!
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி!!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!!!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!!!
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!!!

      எமது பணி...